இந்த திருவிழாவை பற்றி தெரியாதவர்களும் உண்டு என்று எனக்கு சந்தேகம் இல்லை... இந்த திருவிழாவை பற்றி சுருக்கமாய் நன் சொல்கிறேன்... நாம் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் மட்டும் இல்ல நம்ம லைப்... நம்மள சுத்தி என்ன பண்றாங்க எப்படி எல்லாம் கிராமத்துல இருக்கவங்க திருவிழா வை கொண்டடுராங்கனு தேரிஞ்சுகனும்....
கள்ளழகர் (விஷ்ணு) ,மீனாக்ஷி அம்மனின் அண்ணன்...அழகர் குடி இருப்பது அழகர் மலை , மதுரயில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அழகர் தன் தங்கையின் திருமணத்திற்காக மதுரையை நோக்கி பயணம் செய்தார். அழகர்மலை மிகவும் அடர்த காடுகள் மற்றும் மலைகளால் உருவானது.. இன்றும் கூட அடர்த காடுகளை காணலாம்.. அக்காலத்தில் அந்த காடுகளில் நிறைய திருட்டு பயம் நிலவியது (அந்த காலத்திலே அபடின இப்போ இன்னும் அதிகம் ) . இதை கண்ட அழகர் தன்னை ஒரு திருடன் போல வேடம் அணிந்து மலை கடந்தார். மலைகளின் இடுகுகளிலும் திருடர்களிடமும் இருந்து தப்பித்து ,சமாளித்து அவர் மதுரையை வந்து அடைந்தார்...
அவர் ஒரு நாள் தாமதமாக வந்தார் என்பது அபோதுதான் அவருக்கு தெரிந்தது ..( அந்த காலத்தில் பஸ் வசதி கிடையாது அது தான்....அவர் நினைத்தாள் போர்ட் கார் வங்கி இருக்கலாம் ,அனால் அவர் அதை செய்ய வில்லை ... காரணம் அன்று வாழ்ந்த அரசர்கள் மக்கள் பணத்தை மக்களுக்கு மட்டும் தான் செலவு செய்தர்கள்... அனால் இன்று.. தன் பணம் மட்டும் போதாது மக்கள் பணத்தையும் கொண்டு உல்லாசமாய் இருக்கிறார்கள் அதிகாரத்தில் இருக்கிறவர்கள் ) .தாமதமாக வந்துவிடோமே என்று அவசரமாய் மண்டபதிற்கு சென்றார்.. அவர் வைகை ஆற்றை கடக்கும் போது தான் தெரிந்தது மீனாக்ஷி சுண்டரேஷ்வர் கல்யாணம் முடிந்தது என்று...
தன் அண்ணன் வந்திருப்பதை அறிந்த தங்கை மீனாக்ஷி அண்ணனை வரவேற்க வைகை ஆற்றின் கரையை வந்து அடைந்தாள்.. தான் அங்கு இல்லாமல் திருமணம் நடந்ததே என்று கோபம் கொண்டார் அழகர்.. தன் தங்கைக்கு வாங்கி வந்த திருமண பரிசுகளை வைகை கரையிலே வைத்து தன் தங்கையும் கையில் கொடுத்து விட்டு , தனக்கு சொந்தமான அழகர் மழைக்கு சென்றார்....
இது தான் எந்த திருவிழாவின் அம்சம்....
No comments:
Post a Comment