Wednesday, February 8, 2012

என் சொந்த ஊர் ......

என் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் இருக்கும் டொம்புசேரி. அழகான ஓர் கிராமம். கடவுள் வாழும் இடம் என்று கிராமங்களை சொல்வது உண்மை தான். சூது வாது தெரியாத அருமையான மனிதர்கள்.இன்றும் அழகாய் தெரியும் வயதான பாட்டிகள் , என்றும் இளமையான தோற்றம் கொண்ட தாத்தாகள்.
எங்கள் ஒருக்கு தேனிஇல் இருந்து 4 முறை மட்டும் தான் பஸ் வரும்.அந்த டைம் விட்ட அபாரம் ரொம்ப கஷ்டம் தான்.எங்க ஊர் பஸ் ஸ்டான்ட் ஒரு ஆலமரம் தான்.எங்க தாத்தா பாட்டி இருக்கும் பொது இருந்து எப்போ வரைக்கும் அந்த ஆலமரம் தான் பஸ் ஸ்டான்ட்.என்ன தான் பஸ் ஸ்டான்ட் கட்டி விட்டாலும் அந்த ஆலமரம் தரும் நிழலையும் குளுமையான காற்றையும் எந்த AC யும் குடுக்காது.
பத்திரகாளி புறம் ,எங்க ஊருக்கு பக்கத்துக்கு ஊரு. பஸ் அந்த ஊருக்கு வந்த அப்றம் தான் எங்க ஊரு காரங்க பஸ் ஸ்டான்ட் கு போவாங்க .பக்கத்துக்கு ஊரு எங்க வீட்டு பின்னாடி பொய் பாத்தாவே தூரமா தெரியும். ரெண்டு ஊருக்கும் இடைல பச்சை பசுமையான வயல் தான் இருக்கும். அறுவடை நாட்கள்ல நெல் மணம் மனதை கொள்ளைகொள்ளும்...
பொழுது சாஞ்சா எல்லாரும் வீட்டுக்கு வந்துருவாங்க. அப்போ எல்லாம் எங்க தாத்தா வீட்ல தான் டிவி இருக்கும். எல்லாரும் எங்க தாத்தா வீட்டுக்கு வந்து தான் டிவி பாபாங்க. அப்போ எல்லாம் தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளி கிழமைந ஒளியும் ஒலியும். வீடே ஒரே அமர்களமா இருக்கும்.
எங்க பாட்டி அவங்களுக்கு தண்ணி குடம் எடுத்து வச்சுருவாங்க. எங்க பாட்டி எபயுமே ஷேர் ல தான் உட்காருவாங்க.நியூஸ் போட்ட எல்லாரும் அமைதியா நியூஸ் ரொம்ப கவனமா கேட்பாங்க.. நியூஸ் முடிச்சதுக்கு அப்றம் அத பத்தி டிச்கிச்ஸ் பன்னுவாங்க.
எங்க தாத்தா டொம்புசெர்ரி பஞ்சாயத்துக்கு நிறைய நிலம் ப்ரீய கொடுதுடறு.அதுல தான் அந்த ஊருக்கு மருத்துவமனை , போஸ்ட் ஆபீஸ், ரேஷன் கடை, பால் பண்ணை எல்லாம் கட்டுனாங்க. எங்க தாத்தா ஸ்கூல் கட்டுனாரு. ஒன்றாம் வகுப்புல இருந்து எட்டாம் வகுப்பு வரை . " திருப்பதி மெமோரியல் ஸ்கூல் ". 60 வருஷம் ஆகுது அந்த ஸ்கூல்.
ஸ்கூல் மதியம் சாப்பாடுக்கு கூட்டம் அழை மோதும். .......
மரக்கம் முடியாத அந்த அருமையான நாட்டகள்.....
என்னும் எங்கள் ஊரின் அழகு நிலைத்து நிற்கிறது.....
என் வாழ்வின் நம்பிக்கை என் ஊர் தான்.. நான் என்ன இன்னலில் இருந்தாலும் இந்த அருமையான நினைவுகள் என் வாழ்வில் நம்பிக்கை அழிகிறது..
அவர் அவர் வாழ்ந்த சிறு வயது நினைவுகள் அனைவர்க்கும் என்றும் வாழ்வில் புது நம்பிக்கை தரும் என்று நம்பிகிறேன்...

No comments:

Post a Comment

Great

Followers